ஊழல் குற்றச்சாட்டின் கீழ் மேர்வின் சில்வாவிற்கு எதிராக முறைப்பாடு

ஊழல்கள் மற்றும் முறைக்கேடுகளில் ஈடுபட்டதாக முன்னாள் பொதுமக்கள் உறவுகள் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு எதிராக இலஞ்ச ஊழல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் சிசிர ஜெயக்கோடி இந்த முறைப்பாட்டை நேற்று வெள்ளிக்கிழமை ஆணைக்குழுவில் முனவைத்துள்ளார்.

அந்த முறைப்பாட்டில், 2007ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் ‘பிபிதென கௌனிய’ அபிவிருத்தி திட்டத்தின் போது 15 மில்லியன் ரூபாவை மேர்வின் சில்வா மோசடி செய்ததாகவும், கிரிபத்கொட ‘சுகத வர்த்தக சங்கம்’ என்ற திட்டத்தின் கீழ் 2 இலட்சம் ரூபாவை பெற்றுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.