சிறிலங்காவில் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தடை நீக்கம்

ngo
இலங்கையில் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு எவ்வித தடைகளோ கட்டுப்பாடுகளோ விதிக்கப்படமாட்டாதென பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.ஆனால், இலங்கைளின் நீதி அமைப்புக்குள் அரச சார்பற்ற நிறுவனங்கள் தமது பணிகளை முன்னெடுக்க வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழுவின் அதிகாரிகள், பிரதமரின் செயலாளரை சந்தித்து கலந்துரையாடியபோதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் அரச சார்பற்ற நிறுவனங்கள் இனி வரும் காலங்களில் கருத்தரங்குகள் உள்ளிட்ட செயற்பாடுகளை மேற்கொள்ளலாமென்று தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, அதற்கான சுற்றுநிருபம் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் இலங்கையில் அரச சார்பற்ற நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட ஊடகவியல் உள்ளிட்ட பல கருத்தரங்குகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்ட அதேவேளை, பின்னர் அதற்கு தடையும் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.