கிளிநொச்சியில் சட்டவிரோத இறைச்சி மீட்பு

meat
கிளிநொச்சி நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 100 மேற்பட்ட கிலோ மான் இறைச்சியும், 30 கிலோவிற்கு மேற்பட்ட பன்றி இறைச்சியும் கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள, மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் மீட்கப்பட்டுள்ளன.

இதன்போது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த இறைச்சி மீட்கப்பட்டுள்ளதுடன், அதனை விற்பனை செய்ய முயற்சித்த நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கிளிநொச்சி மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள இயக்குனர், சாந்த வீரசிங்க அவர்களின் பணிப்புக்கமைய, கே.ஏ.சி.சி குணரத்தின தலைமையிலான குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போதே இந்த இறைச்சிகள் கைப்பெற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

குறித்த தேடுதலின் போது கைது செய்யப்பட்ட நபரும், மீட்கப்பட்ட இறைச்சிகளும் நாளை திங்கட்கிழமை கிளிநொச்சி மாவட்ட நீதிமற்றில் ஆயர்படுத்தவுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.