ஜாவா கடற்பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் விழுந்து நொறுங்கிய எயார் ஏசியா விமானத்தை இறுதி நேரத்தில் இயக்கியது பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த துணை விமானி என தகவல்கள் வெளியானதனைத் தொடர்ந்து, இதுகுறித்து அதிகாரப்பூர்வ குற்றவியல் விசாரணைகளினை பிரான்ஸ் அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
இது தொடர்பில் பிரான்ஸ் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
162 பேருடன் எயார் ஏசியா விமானம் விழுந்து நொறுங்கியதற்கு மனிதத் தவறு காரணமாக இருக்குமா என்ற கோணத்தில் விசாரனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடலில் விழுவதற்கு முன்னதாக அந்த விமானம் கொந்தளிக்கும் கார்மேகங்கள் நிறைந்த பகுதியில் அதிவிரைவாக மேல்நோக்கிப் பறந்ததாகவும், இதன்போது அதிக அனுபவமில்லாத பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த துணை விமானி அதனை செலுத்தியுள்ளதாகவும் விமானத்தின் கருப்புப் பெட்டித் தகவல்களை ஆய்வு செய்து வரும் இந்தோனேசிய போக்குவரத்துப் பாதுகாப்புக் குழு தெரிவித்துள்ளது.