இந்தோனேஷியாவின் பாலியில் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் பிரித்தானியப்பெண் தனது தண்டனைக்கெதிராக மேன்முறையீடு செய்வதற்கு இங்கிலாந்து அரசிடம் சட்ட உதவி அல்லது நிதி உதவி கேட்டு கடிதம் எழுதியுள்ளார்.
தண்டனையை எதிர்நோக்கியுள்ள இங்கிலாந்தின் Cheltenham நகரைச் சேர்ந்த 57 வயதான Lindsay Sandiford எழுதியுள்ள கடிதத்தில் காலம் விரைந்துகொண்டு செல்கின்றது. மேன்முறையீடு செய்வதற்கு இன்னும் சிலவாரங்களே காலஅவகாசம் உள்ளதனால் விரைந்து செயற்பட வேண்டும் என்று உருக்கமாக அதில் கூறியுள்ளார்.
இது குறித்து இங்கிலாந்து வெளியுறவு அலுவலகம் தெரிவிக்கையில்; அவர் உதவிகோரியிருந்தால் இந்த கடினமான நேரத்தில் அவருக்கு ஆதரவு வழங்க தயார் என்று குறிப்பிட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டு மே மாதம் Lindsay Sandiford தாய்லாந்தில் இருந்து பாலிக்கு வந்தபோது கிட்டத்தட்ட 1.6 மில்லியன் பவுண்ஸ்கள் மதிப்புள்ள கொக்கெய்ன் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டது.
துப்பாக்கி சூடு மூலம் மரணதண்டனையை எதிர்நோக்கியுள்ள Lindsay Sandiford தனது பிள்ளைகளைக் காப்பதற்காகவே போதைப்பொருளை காவிச்சென்றதாக தெரிவித்துள்ளார்