பாப்பரசர் பிரான்சிஸின் இலங்கைக்கான அப்போஸ்தலிக்க பிரதிநிதி பேராயர் பியரே நியு ஜென்வன் ரொட் இன்று வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்டார்.
இதன்போது வவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்திற்கு அண்மையில் வைத்து அவருக்கு வரவேற்பளிக்கப்பட்டதுடன் அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள் மற்றும் பொதுமக்கள் சூழ ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
இதனையடுத்து கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் முயற்சியால் அமைக்கப்பட்ட அந்தோனியார் திருவுருவத்தை திறந்து வைத்து விசேட ஆராதனைகளை மேற்கொண்ட பேராயர் இந்தோனியார் ஆலயத்தில் விசேட திருப்பலியும் ஒப்புக்கொடுத்திருந்தார்.
இந் நிகழ்வுகளில் மன்னார் ஆயர் இராயேப்பு ஜோசேப் ஆண்டகை உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்