சசி வீரவன்ச – துமிந்த சில்வா விரைவில் கைது

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவும், பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவும் விரைவில் கைது செய்யப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண வெளியிட்ட தகவலின்படியே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சசி வீரவன்சவிற்கு எதிராக பல்வேறு மோசடி குற்றச்சாட்டுகளும், துமிந்த சில்வாவிற்கு எதிராக போதைப் பொருள் குறித்த குற்றச்சாட்டுகளும் பதிவாகியுள்ளன. இவ்விருவர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பிலான விசாரணை 50 வீதம் நிறைவடைந்துள்ளன.

இந்நிலையில், மேலதிக நடவடிக்கைகள் குறித்து தகவல்கள் வெளியாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலும், இவ்விருவரும் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், எப்போது கைது செய்யப்படவுள்ளனர் என்பது குறித்த திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.