பார்க்டேல் தொடர்மாடிக் குடியிருப்பில் தீ

ரொறன்ரோ பார்க்டேல் தொடர்மாடிக் குடியிருப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ காரணமாக ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிங்ஸ் வீதி மற்றும் லான்ஸ்டவுண் அவனியூ பகுதியில் அமைந்துள்ள குறித்த தொடர்மாடிக் குடியிருப்பின் 4ஆம் மாடியில் தீ ஏற்பட்டதாக தீயணைப்பு வீரர்களிற்கு தகவல் வழங்கப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்களின் சில மணிநேரப் போராட்டத்தின் பின்னர் தீயானது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதன்போது குறித்த பகுதி புகை மண்டலமாக காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புகையினுள் சிக்கிய ஒருவர் தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை வெளியிடப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.