இலங்கை முதலீட்டு சபையின் தலைவர் நியமனம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கை முதலீட்டு சபையின் தலைவராக சட்டத்தரணி உபுல் ஜயசூரியவை நியமித்துள்ளார்.கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவரான உபுல் ஜயசூரிய, 1978ஆம் ஆண்டு சட்ட மாஅதிபர் திணைக்களத்தில் அரச சட்டத்தரணியாக சேவையில் இணைந்திருந்தார்.

அதே வருடத்தில் கொழும்பு பொருளாதார ஆணைக்குழுவின் முதலாவது சட்ட ஆலோசகராகநியமிக்கப்பட்டிருந்தார்.அதுவே தற்போது முதலீட்டு சபை என பெயர்மாற்றப்பட்டுள்ளது.

1983ஆம் ஆண்டு சிறந்த இளைய தொழிலாளர் என்ற நிலையைப் பெற்ற உபுல் ஜயசூரிய, இலங்கை அரச வணிக கூட்டுத்தாபனத்தின் தலைவராகவும் பதவி வகித்தார்.இவர் இலங்கையின் முன்னணி நிறுவனங்கள் பலவற்றில் உயர் பதவிகளை வகித்ததுடன், ஆசிய நிதி நிறுவனத்தின் ஸ்தாபகராவார்.