அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு! 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் அட்லாண்டா பகுதியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

அட்லாண்டா பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் துப்பாக்கியுடன் நுழந்த நபர் அங்கிருந்த பெண் மற்றும் குழந்தைகளை நோக்கி சரமாரியாக சுட்டார். இச்சம்பவத்தில் பெண் உள்பட 5 பேர் பலியாகினர். துப்பாக்கி சூடு நடத்தியவரும் பலியாகினார். மாலை 3 மணியளவில் இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்து சென்றனர். துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த இரண்டு குழந்தைகள் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற்னார்.

துப்பாக்கியால் சுட்ட நபர் உயிரிழந்த பெண்ணின் முன்னாள் கணவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களை அடையாளம் காணவும், இதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளவும் போலீசார் விசாரித்து வருகின்றனர். துப்பாக்கியால் சுட்ட நபரது பெயர் வெளியிடப்படவில்லை. துப்பாக்கியால் சுட்டநபர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் விவாகரத்து செய்து கொண்டனரா என்பது உடனடியாக தெரியவரவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி சூட்டை நேரில் பார்த்தவர்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்னதாக காயம் அடைந்தவர்களை மீட்டனர். துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.