கணனியில் வாட்ஸ் அப்: பயன்படுத்துவது எப்படி?

ஸ்மார்ட் போன் பயனாளிகள் மத்தியில் வாட்ஸ் அப் அதிக வரவேற்பை பெற்றிருந்ததால், அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே சென்றது.

அனைவரும் எதிர்பார்த்தது கணனியில் இதனை பயன்படுத்த முடியுமா? என்பது தான்.

இந்நிலையில் பயனாளிகளின் ஏக்கத்தை பூர்த்தி செய்யும் வகையில், கணனியில் பயன்படுத்தகூடியவாறு வாட்ஸ் அப் வெப் என்னும் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

பயன்படுத்துவது எவ்வாறு?

- முதலில் உங்கள் ஸ்மார்ட் போனில் வாட்ஸ் அப் செயலியை அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.

- கணனியில் கூகுள் குரோம் திறந்து அதில் web.whatsapp.com என்ற தளத்தை ஓபன் செய்து கொள்ளவும்.

- ஓபன் செய்தவுடன் QR code காட்டப்படும்.

- உங்கள் போனில் வாட்ஸ் அப் ஆப் திறந்து, அதில் WhatsApp Web செலக்ட் செய்து கொள்ள வேண்டும், செலக்ட் செய்தததும் QR Scanner ஓபன் ஆகும்..

- இந்த ஸ்கேனர் மூலம், கணனியின் உலாவியில் காட்டப்பட்டிருக்கும் QR code-யை ஸ்கேன் செய்தால் போதும்.

- இது உங்கள் போனையும், உலாவியில் உள்ள வாட்ஸ் அப்பையும் இணைத்து விடும்.

- இது தொடர்ந்து இயங்குவதற்கு, உங்கள் போன் இன்டர்நெட் இணைப்பில் இருக்க வேண்டும்.