மைக்ரோசொப்ட் நிறுவனம் Lumia 640 ஸ்மார்ட் கைப்பேசியினை வடிவமைத்துள்ளது. இதனை விரைவில் அறிமுகம் செய்யவுள்ள நிலையில் ஐக்கிய இராச்சியத்தில் இக்கைப்பேசிக்கான முன்பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன.
5 அங்குல அளவுடைய HD திரையினைக் கொண்ட இக்கைப்பேசியானது 1.2GHz வேகத்தில் செயற்படவல்ல quad core Qualcomm Snapdragon 400 Processor, பிரதான நினைவகமாக 1GB RAM மற்றும் 8GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.
இவை தவிர Windows Phone 8.1 Lumia Denim இயங்குதளம், 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 0.9 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா, 2500 mAh மின்கலம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளன.
149.98 பவுண்ட்ஸ்கள் பெறுமதியான இக்கைப்பேசி எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் வாரத்தில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.