wireless charger ஐ அறிமுகப்படுத்திய Samsung

wireless charger samsung
இந்த வாரம் நடைபெற்ற Mobile World Congress வருடாந்த கண்காட்சியில் இரு நிறுவனங்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்பியற்ற மின்னேற்ற முறையினை மையமாக கொண்டு நடத்தப்பட்ட இந்த வருடாந்த கண்காட்சியில் தளபாடங்கள் விற்பனை நிறுவனமான IKEA மற்றும் தொலைபேசி நிறுவனமாக சம்சங்கிற்கும் இந்த பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

IKEA நிறுவனமானது தமது தளபாடம் மற்றும் மின் விளக்குகளில் charging ports ஐ உருவாக்கியுள்ளது. charging ports   உடன் இணைத்து இந்த பொருட்களை உருவாக்கும் போது 20 யூரோ செலவாகியதாக குறிப்பிடப்பட்டுள்ள அதேவேளை charging ports   இனை தனியாக வாங்கி பொருத்தும் போது 30 யூரோ செலவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கருத்து வெளியிட்ட லண்டன் மற்றும்; அயர்லாந்து சம்சங் நிறுவனத்தின் மின்னுபகரணங்களுக்கான தலைவர் ஆண்டி கிறிவ்த்ஸ், கம்பியற்ற மின்னேற்ற முறையினை சாம்சங் நிறுவனம் முதல்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் இதன் மூலம் கம்பியற்ற மின்னேற்றல் தொடர்பான சிறந்த அனுபவத்தினை மக்கள் பெற்றுக் கொள்ளவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சம்சங் மற்றும் IKEA  இனால் உருவாக்கப்பட்ட கம்பியற்ற மின்னேற்ற முறையானது Qi  charging தரத்தினை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது