மூட்டு வலி குறைய
அறிகுறிகள்:
மூட்டு வலி.
வாத வலி.
தேவையான பொருள்கள்:
கருநொச்சி இலை.
உப்பு.
செய்முறை:
கருநொச்சி இலைகளை நறுக்கி, உப்பு சேர்த்து வதக்கி மூட்டு வலி மற்றும் வாதவலி மேல் கட்டி வந்தால் வலி குறையும்.
மூட்டு வீக்கம் குறைய
அறிகுறிகள் :
மூட்டு வலி.
மூட்டு வீக்கம்.
தேவையானப் பொருட்கள்:
அமுக்கரா இலை,வேர்.
செய்முறை :
அமுக்கரா இலை, வேர் ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்து பற்று போட மூட்டு வலி, மூட்டு வீக்கம் குறையும்.
மார்பு வலி
அறிகுறிகள்:
மார்பகம் வீங்குதல்.
மார்பகத்தில் இரத்தம் உறைதல்.
தேவையான பொருட்கள்:
கஸ்தூரி மஞ்சள்.
வெற்றிலை.
செய்முறை:
2 தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள்.
ஒரு வெற்றிலை
இரண்டையும் சேர்த்து தினமும் 2 வேளை மெல்ல வேண்டும்.
மார்பு படபடப்பு
அறிகுறிகள்:
மூச்சு விட இயலாமை.
பேசும் போது தொண்டையில் எரிச்சல்.
தொடர் இருமல்.
தேவையான பொருட்கள்:
கிஸ்மஸ் பழம்.
கொத்தமல்லி.
செய்முறை:
ஒரு தேக்கரண்டி கிஸ்மஸ் பழம்.
ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி.
இவை அனைத்தையும் ஒன்றாக இரவு முழுவதும் சுடவைத்து காலையில் அரைத்து வடிகட்டி குடித்தால் மார்பு படபடப்பு குணமாகும்.
