உலகிலேயே மிக விலையுயர்ந்த கேக் இதுதான்

இங்கிலாந்தைச் சேர்ந்த டெஃபி விங்ஹாம் என்பவர் சமீபத்தில் உலகிலேயே மிக விலையுயர்ந்த ஆடையை வடிவமைத்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.

தற்போது இவர் உலகிலேயே மிக விலை உயர்ந்த கேக் ஒன்றை உருவாக்கி அசத்தியிருக்கிறார்.

சுமார் 6 அடி நீளமும் 450 கிலோ எடையும் கொண்ட இந்த கேக்கில் 4 ஆயிரம் வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன.
இதில் உள்ள 17 அபூர்வ வைரக்கற்களின் விலை மட்டுமே ரூ.300 கோடி!

இந்த கேக்கில் 120 கிலோ ஐஸிங்கும், 60 கிலோ சொக்லட்டும் சேர்க்கப்பட்டுள்ளன.

கேக் மீது வைக்கப்பட்டு இருக்கும் சொக்லட் பொம்மைகள் கைகளால் உருவாக்கப்பட்டவை.

சுமார் 50 ற்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் 1,100 மணி நேரம் செலவிட்டு, ரூ.512 கோடி மதிப்புள்ள மிக விலை உயர்ந்த இந்த கேக்கை டெஃபி உருவாக்கி அசத்தியிருக்கிறார்!