இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் 6.6 ரிக்டர்

இந்தோனேஷியாவில் உள்ள சோரங்க் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இது ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவாகி உள்ளது.

இந்தோனேஷியாவில் உள்ள சோரங்க் பகுதியில்  இன்று அதிகாலை 1 மணி அளவில்  திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.இதனால் மக்கள் வீட்டை விட்டு அலறி அடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். இந்த நிலநடுக்கத்தால் 200 வீடுகள் சேதம் அடைந்துள்ளது. 45க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளார்கள். படுகாயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை உயரக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தோனேஷியாவில் கடலுக்கடியில் உள்ள எரிமலைகள் வெடிப்பதாலும்,கண்ணதிட்டுகள் அடிக்கடி நகர்வதாலும் இந்த நிலநடுக்கம் ஏற்படுகிறது என்று அமெரிக்க  புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.