பிரான்சின் Marseille நகரில் ஆயுததாரி ஒருவர் பிரான்ஸ் பொலிசார் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளார். ஏ.கே ரக துப்பாக்கியை வைத்திருந்த ஆயுததாரி தனது தலைப்பகுதியை மறைத்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.
இன்று திங்கட்கிழமை காலைவேளையில் துறைமுகப்பகுதி நகரான Marseille இல் பொலிசார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் குறித்த பகுதிக்கு மேலதிக துருப்பினர் விரைந்துள்ளனர். அதேவளை பிரெஞ்ச் பிரதமர் மனுவேல் வோல்ஸ் அங்கு விஜயம் செய்துள்ளதாக பொலிஸ் தரப்புச் செய்திகள் கூறுகின்றன.
