தென் சீனா புஜியன் (fujian) மாவட்டத்தின் ஷியாமென் நகரில் உள்ள கடையொன்றின் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ளன. 600 சதுர மீட்டர் பரப்பளவுடைய களஞ்சியசாலையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த பிளாஸ்ரிக் மற்றும் ஸ்பொஞ்ச் பொருட்களே இந்த தீ விபத்தில் முற்றாக எரிந்துள்ளன.
இலகுவில் தீப்பற்றக்க கூடிய பொருட்கள் என்பதால் தீ மிக விரைவாக பரவியதால் தீயணைப்பு வீரர்கள் மிகுந்த சிரமத்தின் மத்தியில் குறித்த தீயினைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக தீயணைப்பு வீரர் குழுத் தலைவர் தெரிவித்துள்ளார். மேலும் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அப்பகுதி பொலிஸார் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.